சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 96,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 13,145 ரூபாய்க்கும், ஒரு சவரன் 105160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 209 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,09,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
