ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்..

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த திரு.தேவன் த/பெ. சின்னையா (வயது 50) மற்றும் சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்த திரு.மோசன், த/பெ.குப்பையா (வயது 39) ஆகிய இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களும் இன்று (7- 9- 2023) காலை செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.