தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை பெற்றுத் தரும் நோக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அதிகாரிகள் குழு தற்போது ஜெர்மனியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பயணத்தின் தொடக்கத்திலேயே, முக்கியமான துறைகளான ரயில்வே தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேம்பட்ட பொறியியல் துறைகளில் ரூ.3,201 கோடி மதிப்புள்ள முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 6,250 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாகவும், இது மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி, மாணவர்களின் வேலைவாய்ப்பு கனவுகளுக்கும் பெரும் ஆதரவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தங்கள் இந்நிலையில் கையெழுத்தாகியுள்ளதோடு, “தமிழ்நாட்டை முதலீட்டாளர்களுக்கான விருப்பமான இடமாக மாற்றும்” முதல்வரின் முயற்சிக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடக்கமாக கருதப்படுகிறது.
