தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது.
இத்தகைய காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும் எனவும், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்களுக்கு தீவிர காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இது போன்ற வைரஸ் காய்ச்சல் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது எனவே பொதுமக்கள் தனிப்பட்ட சுகாதார முறைகளை பின்பற்றுவது அவசியம்.
அதாவது அடிக்கடி கைகளை கழுவுவது, வீட்டிற்கு வந்ததும் சுத்தமாக கை, கால், முகங்களை கழுவி வீட்டின் உள்ளே செல்வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
