சுவிட்சர்லாந்தில் உள்ள பெருநிறுவனங்களின் பணி கலாச்சாரம் குறித்து சிம்ரன் கோகா என்ற பெண் பகிர்ந்த தகவல்கள், இந்தியத் தொழில்முறை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

வெறும் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அங்குள்ள அலுவலகச் சூழல் மற்றும் ஊழியர்களை நடத்தும் விதம் குறித்து அவர் பகிர்ந்துள்ள பத்து முக்கிய அம்சங்கள் தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

அங்குள்ள அலுவலகங்களில், மீட்டிங்கிற்கு ஒரு நிமிடம் தாமதமாக வருவது கூட தொழில்முறைக்கு எதிரானது எனக் கருதப்படுகிறது. இந்திய அலுவலகங்களில் நிலவும் ‘நீண்ட நேரம் வேலை செய்வதுதான் திறமை’ என்ற பிம்பத்தை முற்றிலுமாகத் தகர்க்கும் வகையில், அங்கு வேலைத்திறனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அலுவலக நேரத்தில் வேலையைச் சரியாக முடிப்பதே அங்கீகரிக்கப்படுகிறது; 12 மணி நேரம் வேலை செய்வதை அவர்கள் திறமையாகப் பார்க்காமல், மோசமான திட்டமிடலாகவே பார்க்கின்றனர்.

முக்கியமாக, அலுவலக நேரம் முடிந்த பிறகு மேலதிகாரிகள் யாரும் ஊழியர்களைத் தொடர்புகொள்வதில்லை. தனிப்பட்ட நேரத்திற்கு அங்கு மிகுந்த மதிப்பு அளிக்கப்படுகிறது. ஊழியர்கள் தங்களின் விடுமுறை நாட்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மேலாளர்களே வற்புறுத்தும் அதிசயம் அங்கு நடக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Simran Khokha | Get Hired in Europe 🇪🇺 (@simran.khokha)

“>

மேலும், சிஇஓ முதல் இன்டர்ன் வரை அனைவரும் உணவகத்தில் சமமாகவே நடத்தப்படுகிறார்கள்; ஒருவரை ஒருவர் ‘சர்வீஸ்’ செய்யச் சொல்வது அங்கு பழக்கமே இல்லை. மேலாளர்களின் முடிவுகளை ஊழியர்கள் வெளிப்படையாக விமர்சிக்கலாம், ஆனால் அதற்குத் தரவுகளுடன் கூடிய விளக்கம் தேவை.

இந்த கலாச்சாரம் மாற்றத்தைப் பற்றி இந்தியர்கள் பலரும், “எங்கள் நிறுவனத்திலும் இது வேண்டும்!” என்று சமூக வலைதளங்களில் ஆதங்கத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.