உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி செய்த காரியம் இப்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ரீட்டா என்ற அந்தப் பெண்மணி, நவராத்திரி அன்று பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்றபோது, அவரது வங்கி கணக்கில் சுமார் 10 கோடி ரூபாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஒரு நிமிடம் கண்ணையே நம்ப முடியாத அவர், மற்றொரு ஏடிஎம் மெஷினுக்குச் சென்று சோதித்த போதும் அதே ‘கோடி’ கணக்கான தொகை காட்டியது. உடனே பதற்றமடையாமல், தனது செல்போனில் அந்தத் திரையை வீடியோவாக எடுத்துக் கொண்டார்.

​வீட்டிற்கு வந்த ரீட்டா, “இந்த பணம் நமக்குச் சொந்தமானது இல்லை, இதில் ஒரு ரூபாயைக் கூட யாரும் தொடக்கூடாது” என்று தனது குடும்பத்தினருக்குக் கட்டளையிட்டார். வங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பணம் வந்திருக்கலாம் என வங்கி மேலாளர் தெரிவித்த நிலையில், ரீட்டாவின் இந்த நேர்மையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து ஏஐ (AI) தொழில்நுட்பத்திடம் கேட்டபோது, “ரீட்டா செய்தது வெறும் நேர்மை மட்டுமல்ல, சட்டப்படி அவர் எடுத்த மிகச் சரியான முடிவு” என்று கூறியுள்ளது. ஆதாரமில்லாமல் அந்தப் பணத்தைச் செலவு செய்திருந்தால், வருமான வரித்துறை மற்றும் சட்டச் சிக்கல்களில் அவர் சிக்கியிருக்கக்கூடும். மொத்தத்தில், பேராசைப்படாமல் தனது குடும்பத்தை மிகப்பெரிய ஆபத்திலிருந்து ரீட்டா காப்பாற்றியுள்ளார்!