சமூக வலைதளங்களில் எந்த வீடியோ எப்போது வைரலாகும் என்று யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோ அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. ஒரு புத்திசாலி குரங்குக்கும், சாதுரியமான மனிதனுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான மொபைல் போன் “டீல்” தான் இந்த வீடியோவின் ஹைலைட். நபர் ஒருவரின் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய குரங்கு, கட்டிடத்தின் மேல் மொபைல் போனுடன் அமர்ந்து கொள்கிறது. கீழே நின்றவர்கள் எவ்வளவோ முயன்றும் அது போனைத் தர மறுத்து, அவர்களைக் கேலி செய்வது போல விளையாடிக் கொண்டிருக்கிறது. குரங்குகளின் அசாத்திய புத்திசாலித்தனத்தைக் காட்டும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதையடுத்து, அந்த நபர் உடனடியாக ஒரு சாதுரியமான யோசனை செய்து, கடையில் இருந்து ஒரு ‘ப்ரூட்டி’ (ஜூஸ் பாக்ஸ்) வாங்கி வந்து குரங்கை நோக்கி வீசுகிறார். ஜூஸ் பாக்ஸைக் பார்த்த அடுத்த கணமே, அந்த குரங்கு கையில் வைத்திருந்த மொபைல் போனை கீழே போட்டுவிட்டு ஜூஸைக் கவ்விக் கொள்கிறது. கீழே நின்ற நபர் சற்றும் தாமதிக்காமல் சுதாரிப்பாகத் தனது போனைப் பத்திரமாக மீட்டெடுக்கிறார். இந்த சுவாரசியமான ‘பண்டமாற்று’ வீடியோவானது @Dr_sandeep01 என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறது. “இக்காலத்துக் குரங்குகள் டீல் பேசாமல் எதையும் செய்வதில்லை” என்றும், “சரியான நேரத்தில் சரியான ஆஃபர்” என்றும் நெட்டிசன்கள் கலகலப்பான கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
भाई! नीचे से फ्रूटी फेंको, तब जाकर तुम्हारा आईफोन वापस मिलेगा।
No Cash, Only Juice pic.twitter.com/nziD5yioy6
— Dr. Sandeep (@Dr_sandeep01) June 22, 2026
