தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சட்டசபை கூட்டத்தின் முதலமைச்சர் விஜய் டாஸ்மாக் நிதி ஒரு குறிப்பிட்ட கட்சியின் தனிப்பட்ட நிதிக்கு சென்றதாக குற்றம் சாட்டிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் அது எந்த கட்சி என்று தைரியமாக சொல்ல வேண்டும் என சவால்விட்டார். இதனைத் தொடர்ந்து பொத்தம் பொதுவாக முதலமைச்சர் பேசுவதாக குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின் எந்த விஷயமாக இருந்தாலும் நேரடியாக சொல்லவேண்டும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
அதோடு திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். மேலும் முன்னதாக சபையில் பேசும் போது நேற்று நான் பேசும்போதே அவை முடிந்து விட்டதாக சபாநாயகர் கூறினார். பின்னர் நாங்கள் வீட்டுக்கு சென்று டிவி பார்த்தால் ஒரு அமைச்சர் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் இது என்ன விதமான மரபு என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
#WATCH | “வீட்டுக்கு போய் TV பார்த்தா ஒரு அமைச்சர் இன்னும் பேசிட்டு இருக்காரு..”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்#SunNews | #TNAssembly | #UdhayanidhiStalin pic.twitter.com/YQzvWHVHql
— Sun News (@sunnewstamil) June 23, 2026
