டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, இனி ஆன்லைன் பேமெண்ட் செய்யும்போது வெறும் எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் வரும் OTP-ஐ மட்டும் நம்பி இருக்க முடியாது.

ஹேக்கர்கள் எளிதில் உங்கள் பணத்தைத் திருடுவதைத் தடுக்க, இனி ‘மல்டி-பேக்டர் ஆதென்டிகேஷன்’ (Multi-factor authentication) முறை கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது, நீங்கள் பணம் அனுப்பும்போது உங்கள் பின் (PIN) நம்பருடன் சேர்த்து, பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ் ஐடி (Face ID) போன்ற பயோமெட்ரிக் முறைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

​குறிப்பாக, வழக்கத்திற்கு மாறாக பெரிய தொகையை நீங்கள் அனுப்ப முயன்றாலோ அல்லது சந்தேகத்திற்குரிய இடத்திலிருந்து பணப் பரிவர்த்தனை செய்தாலோ, வங்கி கூடுதல் சரிபார்ப்புகளைக் கோரும். சிம் ஸ்வாப்பிங் மற்றும் ஃபிஷிங் போன்ற சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களைக் காக்கவே இந்த ‘ஜீரோ-ட்ரஸ்ட்’ முறையை RBI அமல்படுத்தியுள்ளது.

ஒருவேளை இந்த புதிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் ஒரு வங்கி பரிவர்த்தனை செய்து, அதில் மோசடி நடந்தால், அதற்கு அந்த வங்கிதான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மக்களே, உங்கள் வங்கி செயலிகளை அப்டேட் செய்து வைத்துக்கொள்வதோடு, பயோமெட்ரிக் வசதிகளையும் ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.