மைசூரு அருகே உள்ள ஹுன்சூர் கிராமத்தில், 6 மாதக் குழந்தை சின்மயி கௌடா வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, தரையில் கிடந்த காய்ந்த செம்பருத்திப் பூவை எடுத்து வாயில் போட்டுள்ளது. தன் அண்ணன் பிடுங்கிவிடுவான் என்ற பயத்தில் அந்தப் பூவை அவசரமாக விழுங்க முயல, அது குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது.
உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. நாம் சாதாரணமாக நினைக்கும் காய்ந்த பூ இதழ் கூட ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தரைப்பகுதியில் எந்தப் பொருளும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.
