ஒடிசா மாநிலத்தில், குழந்தை கடத்தல் கும்பல் என்ற போலி வதந்தியால், வழி தெரியாமல் தவித்த இரு என்ஜிஓ ஊழியர்களைக் கிராமத்து கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கி, அதில் ஒரு பெண் ஊழியரின் ஆடையைக் கிழித்து நிர்வாணப்படுத்திய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் மற்றும் அவரது ஆண் சக ஊழியர் இருவரும் ஸ்கூட்டரில் சென்றபோது, மொபைல் மேப் காட்டிய தவறான வழியால் இந்த ரகசியக் கிராமத்திற்குள் நுழைந்துள்ளனர்; அங்கு வழி கேட்பதற்காக வண்டியை நிறுத்தி, அங்கிருந்த சில குழந்தைகளுக்குப் பாசத்துடன் பிஸ்கட் கொடுத்துள்ளனர்.

இந்த எளிய செயலைத் தவறாகப் புரிந்து கொண்டு ‘குழந்தை கடத்தல்காரர்கள்’ என வதந்தியைப் பரப்பிய கிராம மக்கள், அவர்களின் ஐடி கார்டுகளை ஏற்க மறுத்துத் தடியடி நடத்தியதுடன், பலரும் அதனைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

உயிருக்குப் போராடிய இருவரையும் சில உள்ளூர்வாசிகள் மீட்டுப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

“>

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது தற்பொழுது 21 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளதாகவும், வீடியோவில் உள்ள மற்ற குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.