ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் உலகளவில் வலுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஈரானிய ராணுவத்தின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா பெருமளவு அழித்துவிட்டதாகக் கூறிய டிரம்ப், “புதிய தலைவர் மொஜ்தபா இதுவரை பொதுவில் தோன்றவில்லை; அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது கூட எனக்குத் தெரியாது” எனத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தும் இதே கேள்வியை முன்வைத்துள்ள நிலையில், ஈரானியத் தரப்பு வெளியிட்ட மொஜ்தபாவின் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை எனச் சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளன.

தந்தை அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு பதவியேற்ற மொஜ்தபா, அமெரிக்கத் தாக்குதலில் பலத்த காயமடைந்து தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுச் சரணடைய வேண்டும் என டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை உச்சத்திற்குச் சென்றடைய வைத்துள்ளது.