ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா கடுமையான ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகளைத் தடுக்க டொமாஹாக், தாட்மற்றும் பேட்ரியாட் போன்ற அதிநவீன பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்கா பெருமளவில் பயன்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்த ஏவுகணைகள் தற்போது வேகமாகத் தீர்ந்து வருவதால், அமெரிக்காவிற்கு பெரும் ராணுவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் போருக்கு அதிக ஆயுதங்களை வழங்கிய நிலையில், தற்போது ஈரானுடனான நேரடிப் போரால் இந்தத் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு அமெரிக்காவின் ஆயுத இருப்பைக் காலி செய்யும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறது. ஈரான் ஏவும் மலிவான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க, அமெரிக்கா பல கோடி ரூபாய் மதிப்புள்ள நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இந்த அதிநவீன ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதால், போர்க்களத்தில் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
இப்படியே ஆயுதக் கையிருப்பு குறைந்தால், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்குத் தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்க முடியாமல் அமெரிக்கா கைவிடும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
