அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன் பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை மட்டும் இருக்கும் பேருந்தில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை, படுக்கை வசதி உள்ள பேருந்தில் 2 இருக்கை, 2 படுக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.