மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள நடைமேம்பாலத்தில் கட்டப்பட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து பேனர் ஒன்று, திடீரென சரிந்து கீழே சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது விழுந்தது.
இந்த பதைபதைக்க வைக்கும் விபத்துக் காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த வாகன ஓட்டி எவ்வித பெரிய பாதிப்பும் இன்றி இந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
Thane Shocker
A massive birthday banner installed on the foot over bridge at Teen Haat Naka (Eastern Express Highway) suddenly collapsed and crashed down onto moving traffic below.
It narrowly missed several vehicles and landed directly on a motorcyclist’s head.… pic.twitter.com/OQle87tPMQ
— Siraj Noorani (@sirajnoorani) July 13, 2026
“>
இந்தச் சம்பவம், நகரங்களின் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பலத்த காற்று வீசும் போதோ அல்லது மோசமான வானிலை நிலவும் போதோ இத்தகைய பேனர்கள் சரிந்து விழுந்து ஆபத்தாக மாறுகின்றன.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதோடு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்த பேனரை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
