பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், பேருந்து ஒன்றில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், தன்னைச் சீண்டிய நபர் ஒருவரைத் தனது சாமர்த்தியத்தால் சிக்க வைத்துள்ளார்.
பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த நபர், அந்தப் பெண்ணிடம் தொடர்ச்சியாக அநாகரிகமாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். பயந்து போய் மௌனமாக இருக்காமல், மிகுந்த மனதிடத்துடன் அந்த நபர் செய்த அத்துமீறல்களை தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
वह तो अच्छा हुआ कि लड़की ने समय रहते वीडियो बना लिया, वरना शायद कोई उसकी बात पर यकीन ही नहीं करता।
सफर के दौरान उसके पास बैठा एक व्यक्ति बार-बार उसे गलत तरीके से छूने की कोशिश कर रहा था।
लड़की ने हिम्मत दिखाई, पूरी घटना का वीडियो रिकॉर्ड किया और फिर अपनी आपबीती सबके सामने… pic.twitter.com/GlzXIpMlbX
— ʀᴜᴅʜʀᴀ ʏᴀᴅᴀᴠ🇮🇳 (@Rudhrayadav001) July 12, 2026
இந்த வீடியோ ஆதாரத்தை அவர் சமூக வலைதளங்களில் பகிர, அந்த நபர் சிக்கியதுடன், பெண்ணின் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
எக்ஸ் தளத்தில் வெளியான இந்த வீடியோ, இதுவரை 1.92 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பெண்கள் இத்தகைய இக்கட்டான சூழலில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆதாரங்களுடன் வெளிவருவதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உரக்கச் சொல்கிறது
. இச்சம்பவம் தொடர்பாகப் பலரும் அந்த இளைஞரின் தைரியத்தைப் பாராட்டி வருவதுடன், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்துக் கடுமையான விவாதங்களையும் எழுப்பியுள்ளனர்.
