ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது, முகமூடி மற்றும் சன்கிளாஸ் அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கமேனிக்கு அடுத்தபடியாக ஈரானின் அடுத்த அதிகாரப் பூர்வ தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி பொறுப்பேற்கக் கூடும் என்ற அரசியல் நகர்வுகள் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், இந்த இறுதிச்சடங்கில் முகமூடி அணிந்து வந்த நபர் யார் என்ற கேள்வி சர்வதேச ஊடகங்கள் மத்தியில் எழுந்தது. இந்த மர்ம நபர் வேறு யாருமல்ல, கமேனியின் பேரனான முகமது ஜவாத் தான் என்று தற்போது ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி சாதனங்கள் வெடித்து சிதறிய இஸ்ரேலின் தாக்குதலில், முகமது ஜவாத் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தாக்குதலில் ஏற்பட்ட முகக் காயங்களை மறைப்பதற்காகவே அவர் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது முகமூடி மற்றும் கண்ணாடி அணிந்து வந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அடுத்த வாரிசு அரசியல் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள வேளையில், இந்த இறுதிச்சடங்கு நிகழ்வு மற்றும் அதில் கமேனி குடும்பத்தினரின் வருகை ஆகியவை சர்வதேச அளவில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.