உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கானா அணிக்கு எதிராக கொலம்பியா அணி பெற்ற வெற்றியை, நள்ளிரவில் காரில் மது அருந்திவிட்டு போதையின் உச்சத்தில் கொண்டாடிய இளம் ரசிகைகளின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த போது, பின் இருக்கையில் இருந்த பெண் ஜன்னல் வழியே வெளியே வந்து சாகசம் செய்ய, அவருக்குப் போட்டியாக முன் இருக்கையில் இருந்த மற்றொரு இளம்பெண்ணும் காருக்கு வெளியே வந்து நின்றார்.

போதை தலைக்கேறிய நிலையில், தான் அணிந்திருந்த ஒரேயொரு மேலாடையையும் திடீரெனக் கழற்றி எறிந்துவிட்டு, ஓடும் காரில் அரைகுறை ஆடையுடன் குலுக்கல் நடனமாடி அந்தப் பெண் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப் பார்த்து பின் இருக்கை பெண் பயத்தில் காரின் மேல் பகுதியிலேயே படுத்துக்கொள்ள, அந்த கார் ஆபத்தான முறையில் சாலையில் சீறிப் பாய்ந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டு நிற்க, இவர்களின் காரும் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இந்த அதிர்வில், காரின் ஜன்னல் வெளியே மேலாடை இல்லாமல் ஆடிக்கொண்டிருந்த இளம்பெண் நிலைதடுமாறி, ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்தார்.

அடிபட்ட வேகத்தில் போதை தெளிந்த அந்தப் பெண், விபத்தைக் கண்டு ஓடிவந்த பொதுமக்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, தன் மேலாடை இல்லாத பகுதியை கைகளால் மறைத்துக் கொண்டார். அங்கிருந்த சக பயணிகள் சிலர் அவருக்கு ஆடைகளை வழங்கி, கட்டியணைத்து ஆறுதல் கூறினர். உலகக்கோப்பை கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில், ஓடும் காரில் ஆடையைக் கழற்றி சாகசம் செய்ய முயன்று விபத்தில் சிக்கிய இந்த இளம்பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.