சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது குரங்கு ஒன்று செய்த குறும்பான வீடியோ ஒன்று இணையவாசிகளைச் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், சுற்றுலாப் பயணி ஒருவருடைய பையைத் திறக்கும் குரங்கு, உள்ளே இருந்த துணிகளை எல்லாம் வெளியே தூக்கி வீசுகிறது.

திடீரென அதற்குள் மதுபாட்டில் ஒன்றைக் கண்டெடுக்கும் அந்தக் குரங்கு, அதை மிக லாவகமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடுகிறது. குரங்கின் இந்தத் துணிச்சலான மற்றும் வேடிக்கையான செயலைத் தற்செயலாகப் படம்பிடித்தவர்கள் அதை இணையத்தில் பதிவேற்ற, தற்போது அது பல மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி  வருகிறது.

குரங்குகள் இயல்பிலேயே புத்திசாலித்தனமானவை என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த வேடிக்கையான காட்சியைப் பார்த்த பலரும், “குரங்குக்குக் கூட மதுபாட்டிலின் மதிப்பு தெரிகிறது” என்றும், “அதிர்ஷ்டவசமாகப் பையைத் திறந்து அந்தப் பொருளை மட்டும் குறிவைத்து எடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது” என்றும் தன் கருத்தைப் பகிர்ந்து  வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tanuj Kumar Das (@kunal.7140)

“>

‘kunal.7140’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, பார்ப்பவர்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. விலங்குகளின் இதுபோன்ற குறும்புகள் சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளன என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும்.