வாழ்க்கையின் மிக உன்னதமான தருணங்கள் என்பவை நம் குடும்பத்தாரோடும், நம் மழலைச் செல்வங்களின் சிரிப்பொலியோடும் கழியும் அந்த மாலைப் பொழுதுகள் தான். அப்படித்தான், தன் வீட்டில் நடக்கவிருந்த ஒரு விசேஷத்திற்காக, உறவுகளின் தாகம் தணிக்க வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்போடு, அந்தத் தந்தை கடையில் இருந்து ஒரு பெரிய பெட்டியில் ஐந்து ரூபாய் குளிர்பானப் பெட்டியை வாங்கி வருகிறார்.
வீட்டில் சொந்தங்களின் வருகையால் கொண்டாடும் மனநிலையில் இருக்க, ஆசையோடு தன் கைகளால் அந்தப் பானத்தைக் குழந்தைகளுக்குப் பரிமாற முயன்றார். ஆனால், அடுத்த சில நொடிகளில் விதியின் கொடூரக் கரம் அந்த வீட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் ஒரு மரணம் பயமாக மாற்றும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதில் ஒரு குளிர்பான பெட்டியை எடுத்து குடிக்கும் போது அதில் உள்ளே ஸ்ட்ராவில் ஏதோ அடைப்பது போன்ற விசித்திரமான உணர்வு அவருக்கு ஏற்படுகிறது. சற்றே சுதாரித்துக் கொண்டு, அந்தப் பானத்தை பெட்டியை கிழித்து உற்றுப் பார்த்த தந்தையின் கண்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயின. அந்தப் பானத்தில், ஏதோ ஒரு நச்சுத்தன்மையைப் போலக் கருநிறத் துகள்கள் அப்பட்டமாக மிதந்து கொண்டிருந்தன.
ஃப்ரூட்டி பெரிய பெட்டியில் உள்ளே இருக்கும் ஐந்து ரூபாய் ஃப்ரூட்டி குளிர்பான பெட்டியை உற்றுப் பார்த்தபோது, அழுகிய நிலையில் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத விசித்திரப் பொருள் மிதப்பதைக் கண்டு அந்தத் தந்தை நிலைகுலைந்து போனார். தன் கண் முன்னால் இருந்த அந்தப் பெரிய பெட்டி முழுவதும் கறை படிந்த நச்சாக மாறியிருப்பதைக் கண்ட அவர், தன் பிஞ்சு குழந்தைகள் அதைத் தொடுவதற்குள் தடுத்ததை எண்ணிப் நெஞ்சு படபடக்கப் பதறித் துடித்தார்.
“ஒருவேளை என் குழந்தைகள் இதைத் தெரியாமல் குடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று அந்தத் தந்தை நெஞ்சு உருகிக் கேட்கும் அந்தக் கேள்வி, இன்று சோஷியல் மீடியா முழுக்க ஒட்டுமொத்தப் பெற்றோர்களின் மனதிலும் ஒரு சாட்டையடியாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
வியாபார லாபத்திற்காக மட்டுமே இயங்கி, நுகர்வோரின் உடல்நலனைத் துச்சமாக மதிக்கும் சில தரமற்ற நிறுவனங்களின் அலட்சியம், இன்று நம் குழந்தைகளைக் குறிவைக்கும் மறைமுக ஆயுதமாக மாறியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவில் காட்டப்படும் முன்னணி நிறுவனமான ஃப்ரூட்டி கம்பெனி குளிர்பானம் உண்மையான நிறுவனம் உடையதுதானா அல்லது போலியாக உருவாக்கப்பட்ட ஃப்ரூட்டியின் பெயரைக் கொண்ட நிறுவனமா என்பது தெரியவில்லை. இந்த விழிப்புணர்வு எச்சரிக்கை, இப்போதாவது பெற்றோர்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற ஏக்கத்தோடு இந்தச் செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
