ஐடி துறையில் பணிபுரிந்து வந்த ஒரு இளைஞர், தனது சுதந்திரத்தை இழக்க விரும்பாமல் வேலையை விட்டுவிட்டு, கேப் டிரைவராக மாறி தனது வருமானத்தை இருமடங்காக உயர்த்திய சுவாரசியமான செய்தி இதுவாகும்.
அதோடு மாதத்திற்கு ₹40,000 சம்பளம் பெற்று வந்த அவர், பெருநிறுவன வேலைகளில் இருக்கும் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் பணிச்சுமை காரணமாக தனக்கு “சுதந்திரம் இல்லை” என்று உணர்ந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர், அந்த வேலையைத் துறந்துவிட்டு முழுநேர ஓட்டுநராக மாற முடிவு செய்தார். தற்போது அவர் தனது சொந்த விருப்பப்படியும், மன அழுத்தமில்லாத சூழலிலும் பணிபுரிந்து வருகிறார்.
‘Freedom nahi tha’: Cab driver quits ₹40,000/month IT job, doubles his earnings https://t.co/hUgVPNNAmf
“>
இந்த அதிரடி மாற்றத்திற்குப் பிறகு, அவரது மாத வருமானம் ₹40,000-லிருந்து தோராயமாக ₹80,000 ஆக, அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கார் ஓட்டும் தொழிலில் தனக்கான வேலை நேரத்தை அவரே தீர்மானித்துக் கொள்ள முடிகிறது என்றும், அலுவலக மேலாளர்களின் எந்தவொரு கெடுபிடியும் இல்லாதது பெரும் நிம்மதியைத் தருவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
