தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் உள்ளடி வேலை செய்ததால் வடமாவட்டத்தை சேர்ந்த அகிம்சைக்கு பெயர் போன மகாத்மா பெயரை தாங்கியவரின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறதாம். அமைச்சர் பதவி மட்டுமல்ல அவரின் மாவட்டச் செயலாளர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதனைப் போலவே கொங்கு மற்றும் தென் மாவட்ட அமைச்சர்கள் பெயர்களும் லிஸ்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.