அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்தச் சூழலில் இந்தியாவிற்கு சாதகமான 7 முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, இந்தியாவின் இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்களான ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தாதேவி’ ஆகியவை ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இதில் சுமார் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி கேஸ் உள்ளது.

மேலும், இந்தியக் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த ஈரான் சிறப்பு அனுமதி அளித்துள்ளது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருந்த சுமார் 1.72 லட்சம் இந்தியர்கள் இதுவரை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆர்க்குடா வளைகுடா பகுதிகளில் பணியாற்றும் இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இதுவரை 253 மாலுமிகள் இந்தியா திரும்பியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வெளியுறவு அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயம், இந்தியாவில் சிக்கியிருந்த ஈரானிய சுற்றுலாப் பயணிகளும் சிறப்பு விமானங்கள் மூலம் பாதுகாப்பாக அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.