சமூக வலைதளங்களில் தற்போது ஒரு தந்தையின் பாசப்போராட்டம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் எடுக்கச் சென்ற சிறுவன், அந்த மெஷின் எழுப்பிய பயங்கரமான சத்தத்தைக் கேட்டுப் பயந்துபோய் அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளான். தனியாக மெஷினுக்குள் செல்ல வேண்டிய பயத்தில் அந்தக் குழந்தை கதறித் துடித்தபோது, அதைத் தாங்க முடியாத தந்தை, தன் மகனை அமைதிப்படுத்த ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.

​அந்த எம்.ஆர்.ஐ பெட்டிலேயே மகனைப் படுக்க வைத்த தந்தை, தானும் அவனுடன் சேர்ந்து படுத்துக்கொண்டு, மகனைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். இருவரும் ஒன்றாகவே மெஷினுக்குள் சென்ற அந்தத் தருணத்தில், ஸ்கேன் முடியும் வரை மகனை வருடிக்கொடுத்து அவனுக்குத் தைரியம் கூறியுள்ளார்.

தந்தையின் அந்த அரவணைப்பில், பயந்துபோய் நடுங்கிக்கொண்டிருந்த குழந்தை சட்டென்று அமைதியானது. ஒரு தந்தை தன் குழந்தைக்குப் பாதுகாப்பான அரணாகத் திகழும் இந்த வீடியோ, பார்ப்பவர் அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.