மூன்று வயது சிறுமி ஒருத்தி, தனது தம்பியை ‘கடத்தி’ வைத்துக்கொண்டு மிட்டாய்களைப் பேரம் பேசும் கலகலப்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மியா என்ற அந்தச் சிறுமி, விளையாடும் கூடாரத்திற்குள் தனது 18 மாத தம்பியை வைத்துக்கொண்டு, பிளாஸ்டிக் கயிற்றால் வாசலை அடைத்து “தம்பி வேணுமென்றால் எனக்கு அந்த ஊதா நிற மிட்டாய் பையைக் கொடுக்க வேண்டும்” என்று மெகாபோன் மூலம் மிரட்டல் விடுக்கிறாள்.

அவளது தந்தை மிட்டாய்க்குப் பதில் ஆப்பிள் தருவதாகக் கூறியபோது, “ஆப்பிள் மதிய உணவிற்கு, மிட்டாய் தான் இந்த டீலுக்கு சரி” என்று அவள் கச்சிதமாகப் பதில் அளிப்பது நெட்டிசன்களின் வயிற்றைக் குலுங்க வைத்துள்ளது.

இந்த வீடியோவை இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சிறுமியின் சமயோசித புத்தியையும், தளராத பேச்சுவார்த்தைத் திறமையையும் பார்த்த பலரும், “இவள் எதிர்காலத்தின் பெரிய நிறுவனத் தலைவி  என்று பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Last24hrofIndia 🇮🇳 – Raj Kumar (@last24hrofindia)

“>

இறுதியாக அவளது அம்மா மிட்டாயைக் கொடுத்தவுடன், அந்தச் சிறுமி உடனே பையைத் திறந்து முதல் மிட்டாயைத் தனது தம்பிக்கே ஊட்டி விடுகிறாள். “கடுமையான பேச்சாளர், ஆனால் கனிவான அதிகாரி” என்று இந்தச் சிறுமியின் அன்பான மற்றும் புத்திசாலித்தனமான செயலை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.