சமூக வலைதளங்களில் வைரல் ஆக வேண்டும் என்பதற்காகப் பலரும் வினோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஓடும் ரயில் பெட்டிக்குள் உடல் முழுவதும் புற்களால் ஆன ஆடை அணிந்து, கையில் வில் அம்புகளுடன் சில இளைஞர்கள் திடீரெனப் புகுந்துள்ளனர். இவர்களின் இந்த வினோதமான தோற்றத்தைப் பார்த்து அங்கிருந்த பயணிகள் பயத்தில் உறைந்து போயுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும், “வைரல் ஆக வேண்டும் என்பதற்காகப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்குவதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து ரயில்வே சேவா (Railway Seva) அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.
Is this the new trend now ,turning a running train into a stage for reckless prank videos?@RPF_INDIA @RailwaySeva
Location Unknown pic.twitter.com/VtZom7whS0— The Nalanda Index (@Nalanda_index) March 30, 2026
அதில், பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் PNR எண் மற்றும் மொபைல் எண்ணை உடனடியாகப் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, இத்தகைய அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் RPF போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
