கர்நாடக மாநிலம் வெள்ளக்காவி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் விஷம் கலந்தனர். அந்த தண்ணீரை குடித்த 11 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்களது உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படவில்லை.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். அதில் இந்து வலது சரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அந்த பகுதி தலைவரும் ஒருவர். சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் வேலை பார்க்கிறார். அவர் மீது பழி சுமத்தி அவரை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக திட்டம் போட்டு தொட்டியில் விஷம் கலந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை குறிப்பிட்டு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும். அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழி வகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு சான்று என பதிவிட்டுள்ளார்.
