மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சந்தன்நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை, திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் மற்றும் தொழிலதிபராக இருந்த பிந்து சக்ரவர்த்தி என்பவர் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவில், பைக்கில் ஏற முயன்ற சக்ரவர்த்தி மீது, இருவரும் அரிவாளுடன் திடீரென தாக்குதல் நடத்துவது தெளிவாக காணப்படுகிறது. கழுத்து பகுதியில் மூன்று முறை வெட்டப்பட்ட அவர் தரையில் விழுந்ததும், மேலும் இருவர் விரைந்து வந்து அருகில் வருகிறார்கள். காயமடைந்த நிலையில் அவர் எழுந்து உட்கார, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், பலத்த  காயத்தால்   உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு அரசியல் காரணம் இல்லை எனவும், பிந்து சக்ரவர்த்தி மற்றும் உள்ளூர் சக்திவாய்ந்த நபரான பிஷ்வநாத் தாஸ் இடையே நிலவிய சொத்து தகராறே காரணம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

“>

 

இந்த கொலைக்காக பிஷ்வநாத் தாஸ் ₹3 லட்சம் கொடுத்து ஒப்பந்தக் கொலையாளிகளை வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலிருந்து கொண்டு வந்ததாகவும், சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் பிடிபட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.