தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்துப் பேசியுள்ள அதிரடிச் சம்பவம் தற்பொழுது தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையும் கிளப்பியுள்ளது. \

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, முதலமைச்சர் விஜய் அவரது இல்லத்திற்கே நேராகச் சென்று நேரில் சந்தித்துள்ளார். இந்த அதிரடிச் சந்திப்பானது முற்றிலும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு (Courtesy Visit) என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரும், நீதித்துறையின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் தலைமை நீதிபதியும் இப்படி நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது, வழக்கமான ஒரு நிகழ்வு என்றாலும் தற்போதைய அரசியல் சூழலில் இது சாமானிய மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

தமிழக முதல்வரின் இந்த திடீர் இல்ல விசிட் மற்றும் சந்திப்புப் புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, “அரசியல் களத்துல அடுத்தடுத்து மெகா சம்பவங்கள் காத்துட்டு இருக்கு போலயே !” என்று நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.