தமிழகத்தில் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே தற்பொழுது ‘சோபா’ விவகாரத்தில் வெடித்துள்ள புதிய மெகா அரசியல் மல்லுக்கட்டு மற்றும் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ், திமுக வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குக் கொடுத்துள்ள அதிரடியான பதிலடி தற்பொழுது தமிழக அரசியல் களம் மற்றும் இணைய ஏரியாவில் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையும் கிளப்பியுள்ளது.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் இப்படிப்பட்ட மோசமான அரசுக்கு வாக்களித்துவிட்டோமே என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள்; இந்த சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று தவெக அரசை மிகக் காரசாரமாக விமர்சித்திருந்தார்.
மேலும், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “4 இருக்கை கொண்ட சோபா தற்போது 5 இருக்கை கொண்ட சோபாவாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றும் நக்கலாகப் பதிவிட்டிருந்தார். உதயநிதியின் இந்த விமர்சனத்திற்குத் தனது எக்ஸ் பக்கத்தில் அம்புட்டு ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ள தவெக அமைச்சர் அருண்ராஜ், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவைத் தங்களது கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, தாத்தாவுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிகாரத்தைப் பரவலாக்கி அனைவரையும் சமமாக அமர வைக்கும் ஜனநாயக சோபாக்களைப் பற்றி எப்படித் தெரிந்திருக்கும் என்று மிகக் கடுமையான சாட்டையடி கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மேலும், இது 4 பேரோ 5 பேரோ மட்டும் அமரும் சோபா அல்ல, முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் உண்மையான ஜனநாயக சோபா என்றும், சனாதன சிம்மாசனங்களுக்கு இதைப் பற்றிப் பேச எவ்வித அருகதையும் யோக்கியதையும் கிடையாது என்றும் போட்டு உடைத்துள்ளார்.
கடந்த மே 4, 2026 அன்றுடன் தமிழ்நாட்டில் வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்ட அவர், இனி தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஜனநாயக சோபா மட்டும்தான் இருக்கும் என்று அதிரடியாக முழங்கியுள்ளார்.
தவெக அரசுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வீசிய சோபா அம்பு, தற்பொழுது அமைச்சர் அருண்ராஜின் அதிரடிப் பாய்ச்சலால் அவருக்கே ரிட்டர்ன் ஆகியுள்ள இந்த விவகாரம் சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, “அரசியல் களத்துல சோபா வார் இப்போதைக்கு ஓயாது போலயே !” என்று நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் லைக்ஸ்களை அள்ளி பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
