ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், பழங்குடியினருக்கான உரிமைப் போராட்டத்தில் முக்கியக் குரலாக இருந்தவருமான ஷிபு சோரன், 81 வயதில் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் இன்று காலமானார்.

கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது மரணம் ஏற்பட்டது. அவரது மகனும் தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், “இன்று நான் பூஜ்ஜியமாகிவிட்டேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். “ஷிபு சோரன் ஜி அடிமட்டத் தலைவராக இருந்தார். அவர் மக்கள் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பொது வாழ்க்கையில் உயர்ந்தார். குறிப்பாக பழங்குடி சமூகங்கள், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவரது மறைவால் வருத்தமடைந்தேன். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் தொலைபேசியில் பேசினேன்,” என்று அவர் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

“>

 

“டிஷோம் குரு” என்ற பெயரில் அறியப்பட்ட ஷிபு சோரன், ஜார்க்கண்ட் முர்மு முன்னணி (JMM) கட்சியின் நிறுவனர். அவரது மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமூக நலத்திற்காகவும், பழங்குடியினரின் உரிமைக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் என்ற பெருமை அவருக்குச் சொந்தமானது.