பொதுவாக ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு சிறப்பு தன்மைகளை பெற்றுள்ளது. சிலவற்றுக்கு வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு சிறப்பு திறன்களும், சில உயிரினங்களுக்கு இரையாக மாறாமல் தங்களை காத்துக் கொள்வதற்கு சிறப்பு தன்மைகளும் பெற்றுள்ளன. அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் காய்ந்த இலை போல தரையில் கிடந்த ஒன்றை ஒருவர் தொடும்போது அது தனது கை கால்களை நீட்டுகிறது.

அதாவது இந்த வகையான பூச்சி ஒரு சிலந்தி வகையை சேர்ந்தது. இதனை அரியோவிக்ஸியா கிரிபிண்டோரி என்று அழைக்கின்றனர். அதன் நிறம் தோற்றம் முற்றிலும் ஒரு உலர்ந்த இலை போல இருக்கும்.

அது தன்னை வேட்டையாடும் உயிரினங்களுக்கு இரையாக மாறாமல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு இது போன்று செய்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இவற்றைக் கடந்த 2015 ஆம் ஆண்டு கர்நாடக காடுகளில் விஞ்ஞானிகள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய 99 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களால் பகிரப்பட்டுள்ளது.

மேலும் 1.38 ல லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. உலகில் இது போன்ற அதிசய உயிரினங்கள் வாழ்வது அற்புதமானது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.