மத்திய அரசு பெரிய அதிரடியாக, மக்கள் பரவலாக பயன்படுத்தும் 35 முக்கிய மருந்துகளின் சில்லறை விலையை குறைத்துள்ளது. இதில் வீக்கம் தடுக்கும் மருந்துகள், இருதய நோய் மருந்துகள், ஆன்டிபயாடிக், நீரிழிவு மருந்துகள், மனநலம் மருந்துகள் என பல்வேறு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) மேற்கொண்டுள்ளது.

முக்கியமாக விலை குறைக்கப்பட்ட மருந்துகள்:
Aceclofenac + Paracetamol + Trypsin Chymotrypsin – Dr. Reddy’s விற்பனை செய்யும் மாத்திரை ₹13. Cadila Pharmaceuticals தயாரிப்பு ₹15.01.

Amoxycillin + Potassium Clavulanate – முக்கிய ஆன்டிபயாடிக் குழுவுக்குள் வரும் இந்த மருந்தும் புதிய விலை கட்டுப்பாட்டில் அடங்கியுள்ளது.

Atorvastatin + Clopidogrel (40mg + 75mg) – இருதய நோயாளிகள் பரவலாக பயன்படுத்தும் மாத்திரை ₹25.61 ஆக நிர்ணயம்.

Empagliflozin, Sitagliptin, Metformin போன்ற புதிய நீரிழிவு மருந்துகள் – விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான Cefixime + Paracetamol மாத்திரை மற்றும் Vitamin D supplement – Cholecalciferol drops, Diclofenac Injection (₹31.77/ml) போன்ற முக்கிய மருந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசு வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்:
அனைத்து மருந்து விற்பனையாளரும், புதுப்பிக்கப்பட்ட விலைப்பட்டியலை தங்கள் கடைகளில் தெளிவாகக் காண்பிக்க வேண்டும்.

மருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி விற்பனை செய்தால், மருந்து விலை கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை சட்டம் (DPCO) 2013, மற்றும் முக்கிய பொருட்கள் சட்டம் 1955 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில், தவறான முறையில் வசூலித்த தொகை மட்டுமின்றி, அதற்கான வட்டியுடன் மீட்டெடுக்கப்படும்.

இந்த விலை குறைப்பு, குறிப்பாக நீண்டகால நோய்களுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நோயாளிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும். மக்கள் குறைந்த செலவில் உயர் தர மருந்துகளை பெற இது உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.