மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில், இரண்டு நண்பர்கள் மேற்கொண்ட 45 விநாடிகள் கொண்ட ஒரு அட்வென்ச்சர் ரைடு மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் சென்று பின்னர் நூலிழையில் உயிர் பிழைக்க வைத்த ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் காலன் வந்தாலும், நேரம் இன்னும் வரவில்லை’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த விபத்து அமைந்துள்ளது. அந்த இரண்டு நண்பர்களும் காற்றில் பறக்கும் ஒரு ராட்சத சாகச ராட்டினத்தில் அமர்ந்து சவாரி செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் நடுவானில் தலைகீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது.
VIDEO: ४५ सेकंदांची थरारक राइड ठरली जीवघेणी! काळ आला होता, पण वेळ आली नव्हती; हवेत अडकलेल्या दोन मित्रांसोबत पुढे काय घडलं? https://t.co/MbHXFlMRf8 via @loksattalive
“>
இதனால் வெறும் 45 விநாடிகள் மட்டுமே நீடித்த இந்த சவாரி, அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கும், அந்த ரைடில் இருந்தவர்களுக்கும் மரண பயத்தைக் காட்டியது. நடுவானில் மிக உயரமான இடத்தில் அந்த இரண்டு நண்பர்களும் தலைகீழாக மாட்டிக்கொண்டதால், அவர்கள் எப்போது கீழே விழுவார்கள் என்ற பதைபதைப்பு அங்கு நிலவியது. எனினும், அந்த இடத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு, தகுந்த உபகரணங்களின் உதவியுடன் மிக சாதுரியமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, காற்றில் தவித்துக் கொண்டிருந்த அந்த இரு நண்பர்களும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டனர். இந்த நடுக்கத்தை ஏற்படுத்தும் விபத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இது போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடும்போது கூடுதல் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுக்கச் செய்துள்ளது.
