“மாதத்திற்கு 40,000 ரூபாய் வீதம் 18 மாதங்கள் தொடர்ந்து சேமித்து 7.2 லட்சம் ரூபாய் சுதந்திர நிதியை உருவாக்கியதன் மூலம், அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டு விலகிய பெண்ணின் நிதி மேலாண்மைத் திட்டம்!” தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பிரபரலமான ரியா,தான் எந்தவொரு பரம்பரைச் சொத்தோ அல்லது அறக்கட்டளை நிதியோ கொண்டிருக்கவில்லை என்றும், முறையான திட்டமிடல் மூலமே இதனைச் சாத்தியமாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளியே சென்று உணவருந்துவது, தேவையற்ற ஆன்லைன் சந்தாக்கள் மற்றும் ஷாப்பிங் போன்ற செலவுகளைக் குறைத்ததன் மூலம் இந்தத் தொகையைச் சேமித்ததாகக் கூறும் அவர், உடல்நலம், தரமான உணவு மற்றும் தூக்கம் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் தான் எப்போதும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
<a href=”http://
View this post on Instagram
“>
தனது 18-வது மாதச் சேமிப்பின் போது கார்ப்பரேட் வேலைக்கு வெளியே இருந்து கிடைத்த வருமானம், அவரது மாதாந்திர சம்பளமான1.6 லட்சம் ரூபாயைத் தாண்டியதால் வேலையை விட்டு விலகும் தன்னம்பிக்கை கிடைத்ததாகவும், தற்போது மேலும் நான்கு வெவ்வேறு வருமான வழிகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் ஆன்லைன் பயனர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
