“இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை உலக நாடுகள் பலவற்றைக் காட்டிலும் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னோக்கி உள்ளதாக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஜூலியா பாராட்டு தெரிவித்துள்ளார்.”
தனது இந்தியப் பயணத்தின் போது தேநீர்க் கடைகள், உள்ளூர் உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைகள் என அனைத்து இடங்களிலும் கியூஆர் குறியீடு மூலம் வங்கி விபரங்களைத் தட்டச்சு செய்யும் சிரமமின்றி எளிதாகப் பணப்பரிவர்த்தனை செய்ய முடிந்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய நகரங்களில் இணைய இணைப்புத் துண்டிக்கப்படும் சூழலுக்காக வெளிநாட்டுப் பயணிகள் காப்புப் பணம் வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்திய நிலையில், இந்தியாவில் இணையம் இல்லாமலேயே யுபிஐ முறையைப் பயன்படுத்த முடியும் என இந்தியப் பயனர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
சர்வதேச நாணய நிதியத்தால் உலகின் அதிவேகமான பணப்பரிவர்த்தனை முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள யுபிஐ தொழில்நுட்பத்தின் இந்த எளிமையான பயன்பாடு இணையவாசிகள் மத்தியில் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
