40 ஆண்டு கால அரசியல் பயணம் நிறைவு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராகப் பணியாற்றி வந்த ஏ.கே. ஜெயபிரகாஷ், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து, காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், அதுவே கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளின் விருப்பமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கோரிக்கை குறித்து கட்சி மேலிடத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு கடிதம் எழுதியும் எவ்வித சாதகமான முடிவும் எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இதனால் மனவேதனையுடன் தனது 40 ஆண்டு கால காங்கிரஸ் பயணத்தை நிறைவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.