சென்னை: “பெண்களைத் தொட்டுட்டு யாரும் சும்மா எஸ்கேப் ஆக முடியாது” என்று குற்றவாளிகளுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையான மரண வார்னிங் கொடுத்துள்ளார்.
பொதுமேடையில் பேசிய அவர், இதுவரை எல்லாவற்றையும் மிகவும் சாப்டாகச் சொல்லிவிட்டேன் என்றும், இனி பெண்களைத் தொந்தரவு செய்துவிட்டுத் தப்பித்து ஓடிவிடலாம் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தவெக அரசு சகித்துக் கொள்ளாது என்றும் எச்சரித்தார்.
பெண்களின் பாதுகாப்பைக் குலைப்பவர்கள் மீது போலீஸ் மூலம் அஞ்சத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குற்றப்பத்திரிகை (Charge Sheet) உள்ளிட்ட அனைத்தும் மிக வேகமாகத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்த வேகத்தில் எந்தவொரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் காவல் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தப்பு செய்தவனுக்கு மட்டுமே தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கூறினார். அந்தத் தண்டனையைப் பார்த்து இனிமேல் தப்பு செய்ய நினைப்பவனுக்குக் கூட பயம் வர வேண்டும் என முதலமைச்சர் விஜய் அதிரடியாகப் பேசியுள்ளார். இவரின் இந்த ஆக்ரோஷமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
