தமிழக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நயினார் நாகேந்திரனின் பேச்சு நாகரிகமற்றதாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். பெண்களுக்கு எதிரான அவதூறுகளையும் வெறுப்பு அரசியலையும் அடிப்படையாகக் கொண்டே பாஜக அரசியல் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட முந்தைய சம்பவங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே நடிகைகள் குறித்து நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்து பேசியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள விசிக, பொதுவெளியில் வரம்பு மீறிப் பேசியதற்காக அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன… pic.twitter.com/tHXWYyKUcf
— வன்னி அரசு (@VanniTamizhVCK) August 15, 2026
“>
அரசியல் களத்தில் பாஜக – விசிக இடையே இந்த விவகாரம் பெரும் சலசலப்பையும் அனல் பறக்கும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
