தமிழ் சினிமாவில் பிரபலமான படங்களில் ஒன்றுதான் சூரிய வம்சம். இந்த திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த திரைப்படத்தை சலிக்காமல் மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். ஒரு குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் இதில் வரும் கதாபாத்திரங்கள் என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில் சூரியவம்சம் திரைப்படத்தில் சரத்குமாரின் முறை பெண்ணாக பிரியா ராமன் நடித்திருக்கிறார். அவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் சிறுமி ஒருவர் நடித்துள்ளார்.

அவர் யார் என்பது குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலில் குட்டி பெண்ணாக வருவது சீரியல் நடிகை நிவாஷினி திவ்யா. இவர் நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற சீரியலில் நடித்து வந்தார். இவர் நடிகை மட்டுமல்ல சின்னத்திரை தயாரிப்பாளராகவும் இருந்து வருகின்றார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சூரிய வம்சத்தில் வரும் காட்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி “அது தான்”என்பது போல ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் இது நீங்களா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Divya Bharathi Vetrivel இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nivashinidivya)