கரூர் துயரச் சம்பவம் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயும் அவரது ஆதரவாளர்களும் “நீதி வெல்லும்” எனக் கூறி சமூக வலைதளங்களில் வரவேற்று வருகின்றனர்.
இதற்காக தொண்டர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் பதிவுகள் இட, இது TVK-வுக்கு ஒரு பெரிய வெற்றி எனக் கூறி கொண்டாடி வருகின்றனர். ஆனால், மற்றொரு புறம் சில அரசியல் விமர்சகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இதை “கொண்டாட்டத்திற்குரிய வெற்றி அல்ல, மாறாக ஒரு அரசியல் சிக்கலின் தொடக்கம்” எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கரூர் மரணங்கள் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால், விஜயின் முழு கட்டுப்பாடும் அமித்ஷாவின் கைக்குள் செல்லும்.
கரூர் மரணங்கள் வழக்கு CBIக்கு மாற்றப்படுமென்றால், விஜய்யின் குடுமிப்பிடி முழுமையாக அமித்ஷாவின் கைக்குள் செல்லும்.
NDA கூட்டணிக்குள் விஜய்யை இழுக்க அதனையே துருப்புச்சீட்டாக பாஜக பயன்படுத்தும்.
SIT விசாரணையோ, CBI விசாரணையோ எதுவானாலும் விஜய்க்குச் சிக்கல்தான்; தவெகவுக்கு…
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) October 12, 2025
“>
இதை NDA கூட்டணிக்குள் விஜயை இழுக்கும் ஒரு துருப்புச்சீட்டாக பாஜக பயன்படுத்தும். SIT விசாரணையோ CBI விசாரணையோ எதுவானாலும் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் சிக்கலே” எனக் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, “சிபிஐ விசாரணை விஜய்க்கு சாதகமா, பாதகமா?” என்ற புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
