திருமாவளவன் அவர்களின் காரும் ஒரு ஸ்கூட்டியும் மோதிய சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த நிகழ்வுக்கான விளக்கத்தை திருமாவளவன் அளித்தபோது, “ அவர் முறைத்து பார்த்ததால் அங்கு சிறு கைகலப்பு ஏற்பட்டது, சாதி அல்லது மத அடிப்படையில் தாக்குதல் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விளக்கம் எதிர்பாராத விதமாக அரசியல் வட்டாரத்தில் வேறுபட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஒரே கட்சியைச் சேர்ந்த சிலர் ஒரே சம்பவம் குறித்து வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டது சமூக வலைதளங்களில் விவாதத்தை தூண்டியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், “எங்க அண்ணன முறைச்சு பார்த்தா நானே அடிப்பேன்; இதற்கு மேல் இதில் கருத்து கூறினால் குடும்பத்திற்கு பிரச்சினையாகி விடும்” எனப் பேசி, திருமாவளவனுக்குத் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
Seeman :- திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அவர்களை முறைத்தால் நானும் அடிப்பேன்..
திருமா எதிர்த்து கருத்து சொல்ல முடியாது அது குடும்ப சண்டையாய் மாறிடுமாம்..
என்னல நடக்குது இங்க..? pic.twitter.com/6XP1SDG79A
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) October 13, 2025
“>
ஆனால் இதற்கு முன்னாள் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன், “முறைச்சுப் பார்த்தீங்கன்னா அடிப்பீங்களா? இதுவும் ஒரு பண்ணையார் மனநிலைதான்” என கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள், திருமாவளவன் அவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தனது சமூகவலைதள பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் “திருமாவளவன் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பிடுவீங்களா?” எனக் கேள்வி எழுப்பிய சாட்டை துரைமுருகன், சீமான் அவர்களின் சமீபத்திய கருத்துக்கு ஏன் மௌனமாக இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
