கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்னும் மக்களின் மனதில் ஆழ்ந்த காயமாகவே உள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கும் நடவடிக்கையை விஜய் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று இரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய், அனைத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் ஒரே இடத்தில் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் தேவைகளை அறிய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விஜய் வருகைக்கான இடத்தை வழங்க பலரும் தயக்கம் காட்டியிருப்பதாகவும், இதனால் இடம் தேர்வு செய்யும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
இடம் உறுதிசெய்யப்பட்டதும், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு விஜய் கரூர் மாவட்டத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
