திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கு, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நடத்திய குதிரை பேரமே காரணம் என்ற பலத்த வதந்திக்கு வலுசேர்க்கும் வகையில் ஒரு புதிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் தன்னிடம், “மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்களையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்; அவர்களுக்குப் பதிலாக வரும் தேர்தலில் அந்த இரண்டு இடங்களிலும் உங்கள் வேட்பாளர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று நேரிடையாகவே உத்தரவாதம் கொடுத்ததாக வைகோ கூறியதாக ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது.

<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”ta” dir=”ltr”>இதுக்கு பேரு குதிரை பேரம் இல்லயா??? <a href=”https://t.co/tdJ0uryhR5″>https://t.co/tdJ0uryhR5</a></p>&mdash; U2 Brutus (@U2Brutus_off) <a href=”https://x.com/U2Brutus_off/status/2070807235379568704?ref_src=twsrc%5Etfw”>June 27, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

அரசியல் லாபத்திற்காக தவெக தலைவர் விஜய் குதிரை பேரத்தில் (Horse Trading) ஈடுபட்டதற்கு வைகோவின் இந்த வாக்குமூலமே மிகச்சிறந்த சாட்சி என்று விமர்சகர்களும் நடுநிலையாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். தூய்மையான மற்றும் நேர்மையான அரசியலைத் தருவதாகக் கூறிவிட்டு, திரைமறைவில் மற்றொரு கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை ராஜினாமா செய்யச் சொல்லி பேரம் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வைகோவின் இந்தத் தகவலை அடிப்படையாக வைத்து, தவெக-வின் அரசியல் தந்திரங்களையும், திமுக கூட்டணியை உடைக்க விஜய் கையாண்ட உத்திகளையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதித்து வருகின்றனர்.