கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியுள்ளது.

“இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது, இந்த சம்பவத்திலிருந்து திமுக தப்பிக்க முடியாது” என்று அவர் தெரிவித்ததோடு, “தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கும் அவரது தொண்டர்களுக்கும் பாஜக துணை நிற்கும்” எனவும் கூறியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் புதிய இணைப்புகள் உருவாகும் வாய்ப்பு குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. பலரும், “தமிழக வெற்றி கழகம் (TVK) மற்றும் பாஜக எதிர்காலத்தில் கூட்டணி அமைக்குமா?” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில், பாஜக சார்பில் சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் விஜயை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக கோயம்புத்தூரில் பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் “ஒரு வலுவான கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளது” என்று கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதேவேளை, விஜயும் அவரது அணியினரும் முன்னர் பாஜக தங்கள் கொள்கை எதிரியாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“>

 

கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் எந்த காலத்திலும் அவர்களோடு கூட்டணி வைக்க மாட்டோம் என தமிழக வெற்றி கழகத்தின் மற்றொரு முக்கிய நிர்வாகியான ஆதவர் அர்ஜுனா சத்தியம் செய்து பல மேடைகளில் பேசியும் இருந்தார். தற்போது தங்களது அரசியல் லாபத்திற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணம் கேள்விக்குறிதான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.