தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஊர் பெயர்களில் காணப்படும் சாதி சார்ந்த பெயர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளன.

அதன்படி, தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட “போடிநாயக்கனூர்” என்ற ஊர் பெயரில் உள்ள “நாயக்கன்” என்ற சாதிப்பெயரை நீக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இதுபற்றி பலரும் தங்களது ஆதரவும் எதிர்ப்பும் கலந்து கொண்ட கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

“>

இதேநேரத்தில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், போடிநாயக்கனூர், பெத்தநாயக்கன்பாளையம், ரெட்டியார்பட்டி, கண்டமநாயக்கனூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல ஊர்களின் பெயர்களில் சாதிப்பெயர்கள் இணைந்துள்ளன என்பதை பட்டியலிட்டு, “இவையோடு சேர்த்து 700க்கும் மேற்பட்ட ஊர்கள் நாயக்கர் பேரில் உள்ளன; அவற்றை எப்போது நீக்கப் போகிறீர்கள்?” என முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாகக் கேட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, சாதியற்ற சமுதாயம் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.