கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். “நீதி வெல்லும்” என கட்சித் தலைவர் விஜய் சமூக வலைதளங்களில் பதிவு செய்தது, ரசிகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதே நேரத்தில், பலரும் இந்த தீர்ப்பை பல்வேறு கோணங்களில் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக, வழக்கை சிபிஐக்கு மாற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை யார் வெற்றி என கருத வேண்டும் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியான கேள்வி-பதில் வடிவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “TVK கேட்டது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை, ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கியது சிபிஐ விசாரணை. இதை உண்மையில் கொண்டாட வேண்டியது அதிமுகவும் பாஜகவுமே” எனக் கூறி, இந்த வழக்கின் அரசியல் பரிமாணங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
Que – TVK கேட்டது என்ன?
Ans – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஒரு குழு விசாரணை.Que – உச்ச நீதிமன்றம் கொடுத்தது என்ன?
Ans – சிபிஐ விசாரணைQue – சரி சிபிஐ விசாரணை கேட்டது யாரு?
Ans – அதிமுகவும் பாஜகவும் கேட்டுச்சு, அது மட்டும் இல்லாம பாதிக்கப்பட்ட ஒருதர வச்சு…— Chegu Critic (@CheGuevaraOffi1) October 14, 2025
“>
மேலும், “சிபிஐ பாஜகவின் கையில் உள்ளது எனக் கூறிய TVK இப்போது சிபிஐ விசாரணை தீர்ப்பை ஏன் கொண்டாடுகிறது?” என்ற கேள்வி உட்பட பல தாக்கமான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, பாஜக கையில் சிபிஐ இருப்பதாக விஜய் கூறியது உண்மையானால் தற்போது பாஜக கையில் இருப்பது சிபிஐ விசாரணையை ஏற்றுக்கொண்டு விஜய் தானே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
