ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் தனது இருக்கையையே டைனிங் டேபிள், குப்பைத் தொட்டி மற்றும் வாஷ் பேசின் போல மாற்றி அசுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுமார் 5 மணி நேரப் பயணத்தின் போது, அந்தப் பெண் தனக்கு அருகில் குப்பைத் தொட்டி இருந்தபோதிலும், தான் சாப்பிட்ட தட்டுகள் மற்றும் மீதமுள்ள கழிவுகளை ரயிலின் இருக்கையிலும் அதன் அருகிலும் போட்டு அசுத்தப்படுத்தியுள்ளார். மேலும், அந்த இடத்திலேயே கைகளையும் கழுவி, பொதுப் போக்குவரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பொது ஒழுக்கத்தைக் கூட மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.

“>

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “மனிதர்களை விட விலங்குகள் எவ்வளவோ மேல்” என்றும், “இத்தகைய சுகாதாரமற்ற செயல்கள் ஏசி பெட்டிகளிலும் கூட தொடர்ந்து அரங்கேறி வருவது எரிச்சலூட்டுகிறது” என்றும் தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விழிப்புணர்வும், சமூகப் பொறுப்பும் மக்களிடம் இல்லாதிருப்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுவதாக இணையவாசிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.