இந்தியா, தனது அண்டை நாடான நேபாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கான பரிசோதனை விதிகளில் உடனடி தளர்வுகளை அறிவித்து அந்நாட்டுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது.
இந்த புதிய முடிவின்படி, நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு தேயிலை ஏற்றுமதிப் பொருட்களையும் கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டியதில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தேயிலை இறக்குமதிக்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த விதிமுறை தளர்வு காரணமாக, கடந்த சில காலமாக தேக்க நிலையிலும் நெருக்கடியிலும் இருந்த நேபாள தேயிலை தொழில்துறை மற்றும் அதன் ஏற்றுமதியாளர்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். இனி தேயிலை தயாரிப்புகள் எவ்வித தாமதமுமின்றி இந்திய சந்தைகளுக்குள் விரைவாக நுழைய முடியும் என்பதால், நேபாளத்தின் தேயிலை வர்த்தகம் கணிசமாக உயர்ந்து அந்நாட்டு பொருளாதாரம் பெருமளவில் லாபமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
