தமிழக வெற்றி கழக (TVK) ஆதரவாளர்களும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆதரவாளர்களும் இடையே கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, கரூர் துயரச் சம்பவம், சிபிஐ விசாரணை மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் நிலை தொடர்கிறது. இதேநேரத்தில், “தமிழக வெற்றி கழகத்தின் ஹெட் ஆபீஸ்” என பெயரிடப்பட்டுள்ள ஒரு சமூக வலைதள பக்கத்தில், “படித்த தலைவர் உங்களுக்கு கிடைத்ததில் பெருமை கொள்ளுங்கள்” என ஒரு பதிவு வெளியிடப்பட்டது. இந்த பதிவு, விஜயை உயர்த்திப் பேசும் வகையில் இருக்க, எதிரணியினரின் கவனத்தை ஈர்த்தது.

“>

அதனைத் தொடர்ந்து, திமுகவின் தீவிர ஆதரவாளரான டாக்டர் எம்.கே. ஷர்மிளா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதற்கு கடுமையான பதிலடி அளித்துள்ளார். அவர், “ஏய், அவன் லயோலா கல்லூரி டிராப்அவுட் மேன்!” என கிண்டலாக பதிவிட்டு, விஜய் தனது கல்லூரி படிப்பை முடிக்காததை குறிப்பிட்டார்.

மேலும், “கல்லூரி கூட முடிக்காத ஒருவரை ‘படித்த தலைவர்’ என்று கூறுவது சரியல்ல” என்ற வகையில் தனது கருத்தை வெளிப்படுத்தினார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆதரவாளர்கள் இதற்கு எதிராகக் கடும் பதில்களைக் கொடுத்து வருகின்றனர்,